காதலி கிடைக்க சாத்தானிடம் இரத்தத்தில் ஒப்பந்தம்.. சகோதரிகள் கொலையின் அதிர்ச்சி பின்னணி..!!

பிரிட்டனில் ஒரு பூங்காவில் பிறந்த நாள் கொண்டாடிக் கொண்டிருந்த சகோதரிகள் கொலை செய்யப்பட்டது தொடர்பில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.

பிரிட்டனில் Wembley பகுதியில் இருக்கும் ஒரு பூங்காவில் கடந்த வருடம் ஜூன் மாதத்தில்  Bibaa Henry (47) என்ற பெண் தன் சகோதரி Nicole Smallman உடன் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அப்போது இருவரும் கொலை செய்யப்பட்டு, சடலமாக தான் மீட்கப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கில் தற்போது தன்யல் ஹுசைன் என்ற இளைஞர் கைதாகியுள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சாத்தானிடம் ஒப்பந்தம் செய்ததால் அவர்களை பலி கொடுத்தேன் என்று கூறியுள்ளார். இது மட்டுமல்லாமல் லாட்டரியில் அதிகமான தொகையை வெல்வதற்காக தன் ரத்தத்தை வைத்து எழுதி சாத்தானிடம் ஒப்பந்தம் செய்து, இரத்த பலி கொடுப்பதாக உறுதி ஏற்றுள்ளார்.

மேலும், இவர் பள்ளிப் பருவத்தில் தனக்கு காதலி கிடைக்க வேண்டும் என்பதற்காக ரத்தம் சிந்தியிருக்கிறார். அவர் தற்போது வரை, “நான் கொலையை திட்டமிட்டு செய்யவில்லை. சாத்தானுக்கு  ஒப்பந்தம் செய்ததால் பலிகொடுத்தேன்” என்று தான் கூறி வருகிறார். விசாரணை தொடர்ந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *