சிறுவனை அடித்த வியாபாரி…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… விசாரணையில் அம்பலமான நாடகம்….!!

எதற்கு மகனை அடித்தாய் எனக்கேட்ட தந்தையை கத்தியால் குத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள அம்பேத்கார் நகர் பகுதியில் கூலித் தொழிலாளியான ரவி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 10 வயதுடைய மகன் இருக்கின்றார். இந்நிலையில் சிறுவன் அப்பகுதியில் பம்பரம் விளையாடிக் கொண்டிருக்கும்போது அவ்வழியாக அதே பகுதியில் வசிக்கும் இளநீர் வியாபாரியான முருகன் என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த பம்பரமானது எதிர்பாராதவிதமாக அவரின் காலின் மீது பட்டு விட்டது. இதனால் கோபமடைந்த முருகன் சிறுவன் என்று கூட பாராமல் அவரை அடித்து விட்டார். இதனால் சிறுவன் அழுதுகொண்டே தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதனைக்கேட்ட ரவி, தனது மனைவியுடன் அங்கு சென்று சிறுவன் ஏதோ தெரியாமல் செய்து விட்டார் அதற்கு அடித்து விட்டீர்களே என்று கேட்டுள்ளார். இதனால் ரவிக்கும், முருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதத்தில் கோபமடைந்த முருகன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரவியை குத்தியதால் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரவியின் மனைவி அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் சென்று  அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனையடுத்து இளநீர் வியாபாரியான முருகன் என்பவரும் தலையில் பலத்த காயத்துடன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று முருகனிடம் விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் முருகன் அளித்த பதில் காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதனால் காவல் துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று நடத்திய விசாரணையில் ரவிக்கு, முருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் கோபம் அடைந்த முருகன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரவியை குத்தியதால் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்துவிட்டார். இதனைப் பார்த்த முருகன் ரவி இறந்து விட்டார் என்று நினைத்து அங்கிருந்து வீட்டிற்குச் சென்று தனது மனைவியிடம் கூறியுள்ளார். இதனால் முருகன் தான் போலீசில் மாட்டிக் கொள்வோன் என்பதால் தன்னை தாக்கினால் தப்பித்துவிடலாம் என்று கூறியுள்ளார். இதனையடுத்து  முருகனின் மனைவி அவரை கட்டையால் தாக்கியதால் அவர் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தது தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *