திடீரென மாயமான சிறுமி…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது….!!

சிறுமியை கடத்தி திருமணம் செய்த ஆட்டோ டிரைவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்திலுள்ள பாறைக்கல் மேடு பகுதியில் மகாலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூவரசன் என்ற மகன் உள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். இந்நிலையில் பூவரசன் 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 28-ந் தேதி பூவரசன் காதலித்து வந்த சிறுமி திடீரென மாயமானார். இந்நிலையில் சிறுமியை அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் சிறுமியின் அவரது தாயார் இதுகுறித்து பேரணாம்பட்டு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவலதுறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சிறுமியை ஆட்டோ டிரைவரான பூவரசன் வேளாங்கண்ணிக்கு கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதனையறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரையும் மீட்டனர். இதனை தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பூவரசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *