சின்னத்திரை சீரியல் தொடர்கள் மூலம் பிரபலமான நடிகை ரீஹானா சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஆனந்த ராகம் சீரியலில் நடித்துள்ளார். இவர் தனக்கு நேர்ந்த மோசமான நிகழ்வு பற்றி கூறியுள்ளள்ளார். இந்த தகவல் இணையத்தில் பரவி பரபரப்பை கிளப்பி வருகிறது. பொதுவாகவே நடிகை ரீஹானா சில சர்ச்சையான விஷியங்களை மிகவும் வெளிப்படையாக பேசும் குணம் உள்ளவர். இந்நிலையில் இவர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியபோது, பல திடுக்கிடும் உண்மைகளை கூறினார். அவர் கூறியுள்ளதாவது, “நடிகை ரேகா நாயருக்கு பின்னர் என்னைத்தான் சர்ச்சைக்குரிய நடிகையாக பார்க்கின்ற சூழலில் அவர் என்னுடைய தோழிதான்.
சமூக வலைதளத்தில் பல சர்ச்சையான சம்பவங்கள் நடந்து வருவதால், ப்ரொபைல் பிக்சரில் நடிகைகளை போல் மற்ற பெண்கள் தங்களுடைய போட்டோவை வைக்க வேண்டாம் என்றும் கூறினார். அந்த வகையில் எனக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் நிர்வாணமாக வீடியோவும், சில பாகங்களை மட்டும் வீடியோ எடுத்து அனுப்பும்படியும் கூறி, மேலும் சில கேவலமான செயல்களை செய்து அனுப்பினால் 15 லட்சம் வரை பணம் அனுப்புகிறேன் என்று அந்த நபர் கூறியதாக தெரிவித்தார். இதனையடுத்து வங்கி கணக்கு பற்றிய விவரத்தை அனுப்பவும் கூறினார். அவரை சிக்க வைப்பதற்காக அந்த நபரை சந்திக்க வேண்டும் என தெரிவித்த ரீஹானா, ஆனால் அந்த நபர் தற்போது வரை சிக்கவில்லை. இவ்வாறு அவர் பகிர்ந்துள்ள இந்த திடுக்கிடும் தகவல்கள் இணையத்தில் பரபரப்பை கிளப்பி வருகிறது.