அட பாவிகளா ! ஒங்க டிக் டாக் வெறிக்கு ஒரு எல்லை இல்லயா? நடிகர் விவேக்_கின் ருசிகர ட்வீட்…!!

தனது படத்தில் வந்த காட்சியை பயன்படுத்தி ஒருவர் பதிவிட்ட டிக் டாக் வீடியோவை தனது ட்வீட்_டர் பக்கத்தில் ஒரு ருசிகரமான ட்வீட்_டாக நடிகர் விவேக் பதிவிட்டுள்ளார்.

இணையத்தின் வளர்ச்சி மாற்றம் ஏற்பட ஏற்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் சேர்த்தே வளர்ச்சியடைகின்றது. அதிலும் குறிப்பாக டிக் டாக் வீடியோக்கள்  கலக்கி வருவதில் முதன்மை இடத்தை பிடிக்கின்றது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை டிக் வீ டியோக்கள் பதிவேற்றம் செய்து சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றனர்.

இதில் பல்வேறு சமூக சீரழிவு நடைபெறுவதாக புகார்கள் எழுந்தாலும் டிக் டாக் செயலி மிகப்பெரிய பொழுதுபோக்கு சாதனமா பயன்படுகின்றது.இந்நிலையில் இன்று தமிழ் நகைசுவை நடிகர் விவேக் தனது டிவீட்டர் பக்கத்தில் டிக் டாக் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் நடித்த சாமி படத்தில் வந்த ஒரு காட்சியை ஒருவர்  நாயுடன் இணைந்து டிக் டாக் செய்திருப்பார். அதில் அவர் அட பாவிகளா ! ஒங்க டிக் டாக் வெறிக்கு ஒரு எல்லை இல்லயா? என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *