ஒப்போ , விவோ க்கு ஆப்பு வைக்கும் சியோமி … பட்டையை கிளப்பும் Mi ஏ3 ..!!

இந்தியாவில் சியோமி நிறுவனம்  Mi ஏ3 ஆண்ட்ராய்டு ஒன் என்ற புதிய ஸ்மார்ட்போனை   அறிமுகம் செய்துள்ளது .

இந்த   Mi ஏ3  ஸ்மார்ட்போனில்  6.088 இன்ச் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 11 என்.எம். பிராசஸர்,  மற்றும் அதிகபட்சமாக 6 ஜி.பி. ரேம் கொடுக்கப்பட்டுள்ளது . மேலும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டிருக்கும் Mi ஏ3 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு கியூ அப்டேட் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது .

Image result for xiaomi a3

இதுமட்டுமின்றி , ஏழாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது .  இதை சிறப்பூட்டும் வகையில்  48 எம்.பி. சோனி IMX586 சென்சார், f/1.79, 8 எம்.பி. 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. டெப்த் சென்சார், 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. மேலும் , இதன் செல்ஃபி கேமரா நான்கு பிக்சல்களை ஒன்றிணைத்து 1.6μm பிக்சல் கொடுக்கப்பட்டுள்ளது .

 

Related image

 

 

இதில் ,  3டி வளைந்த கிளாஸ் பேக் கொண்டிருக்கும் Mi ஏ3 மாடலில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது . இந்த Mi ஏ3 ஸ்மார்ட்போனில் 4030 எம்.ஏ.ஹெச். பேட்டரி, குவால்காம் குவிக் சார்ஜ் 3.0 18வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது .

 

Related image

 

சியோமி Mi ஏ3 சிறப்பம்சங்கள்:

 

– 6.08 இன்ச் 1560×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே

– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5

– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 665 11 என்.எம். பிராசஸர்

– அட்ரினோ 610 GPU

– 4 ஜி.பி. LPDDR4x ரேம், 64 ஜி.பி. (UFS 2.1) மெமரி

– 6 ஜி.பி. LPDDR4x ரேம், 128 ஜி.பி. (UFS 2.1) மெமரி

– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி- ஹைப்ரிட் டூயல் சிம்

– ஆண்ட்ராய்டு 9.0 பை

– 48 எம்.பி. பிரைமரி கேமரா, 1/2.0″ சோனி IMX586 சென்சார், 0.8μm பிக்சல், f/1.79, எல்.இ.டி. ஃபிளாஷ், EIS

– 8 எம்.பி. 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 1.12μm பிக்சல், f/2.2

– 2 எம்.பி. டெப்த் சென்சார், 1.75μm பிக்சல், f/2.4

– 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0

– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ, இன்ஃப்ராரெட் சென்சார்

– ஸ்பிலாஷ் ப்ரூஃப் (P2i கோட்டிங்)

– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5

– யு.எஸ்.பி. டைப்-சி

– 4030 எம்.ஏ.ஹெச். பேட்டரி

– 18வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

Image result for xiaomi a3

 

இந்த சியோமி Mi ஏ3 ஸ்மார்ட்போன் நாட் ஜஸ்ட் புளு, மோர் தான் வைட் மற்றும் கைன்ட் ஆஃப் கிரே போன்ற கலர்களில்  கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம் விலை ரூ. 12,999 என்றும், 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 15,999 என அந்நிறுவனம் அறிவித்துள்ளது . இதன் விற்பனை வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் துவங்கப்படவுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *