இந்த மனசு-ku தான் மக்கள் செல்வன்-nu சொல்றாங்க…. சின்னத்திரையில் களமிறங்கிய விஜய் சேதுபதி…. குஷியில் பேன்ஸ்….!!!!

பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய்சேதுபதி. இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். இப்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார். இந்த நிலையில் விஜய் சேதுபதி தமிழ் சின்னத்திரைக்கும் வந்து விட்டார்.

அதாவது, zee Tamil டிவியில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் எனும் தொடரில் விஜய்சேதுபதி வருகிறார். தற்போது வெளியாகி உள்ள நினைத்தாலே இனிக்கும் சீரியல் புரோமோவில், ஹீரோ தன் மனைவியை காப்பாற்ற போராடிக்கொண்டிருக்கிறார். அப்போது விஜய்சேதுபதியிடம் இருந்து போன் வருகிறது. அவர் தன் ரசிகர்களை அனுப்பி அவருக்கு உதவிசெய்ய வைப்பது போல காட்டப்பட்டிருக்கிறது. தற்போது அந்த புரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.