அடுத்த மாதம் நடைபெற இருந்த சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியானது, தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது .
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியானது, அடுத்த மாதம் ஜூன் 1 ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை நடைபெற திட்டமிடப்பட்டது . தற்போது அங்கு கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் ,இந்த போட்டியை ஒத்திவைப்பதாகவும்,அதோடு மாற்று தேதியில் போட்டிகள் நடைபெறாது என்று ,சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் சார்பில் நேற்று அறிவிக்கப்ட்டது .இந்த போட்டியானது ஒலிம்பிக் போட்டிக்கு ,தகுதி பெறுவதற்கான கடைசி சுற்று போட்டியாகும் . இதனால் இந்தப் போட்டியில் பங்கு பெற்று, தரவரிசைப் பட்டியலில் முன்னேற்றம் அடைந்தால் மட்டுமே ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும்.
இதற்கு முன்பே இந்திய மற்றும் மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் , தள்ளிவைக்கப்பட்ட நிலையில் தற்போது சிங்கப்பூர் ஓபன் போட்டியும் நடைபெறாததால் ,நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஸ்ரீகாந்த் ஆகியோருக்கு மிகப்பெரிய பின்னைடவு ஏற்பட்டுள்ளது . ஆனால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய அணி பேட்மிண்டனில் பி.வி.சிந்து, சாய் பிரனீத் மற்றும் ஆண்கள் இரட்டையர் ஜோடி பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர் .