டைட்டிலுக்கு காரணம் என்ன….? சூர்யாக்கு சிங்கம்னா அருண் விஜய்க்கு யானை…. விளக்கமளித்த இயக்குனர் ஹரி….!!

யானை படத்திற்கு அந்த பெயர் வைத்ததற்கான காரணம் குறித்து இயக்குனர் ஹரி கூறியுள்ளார். 

தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களை கொடுத்து பிரபல டைரக்டராக இருப்பவர் ஹரி. இவர் தற்போது யானை எனும் படத்தை இயக்கி வருகிறார். அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் பிரியா பவானி, ராதிகா சரத்குமார், யோகிபாபு, சமுத்திரகனி, இமான் அண்ணாச்சி என பல முக்கிய பிரபலங்கள் நடிக்கின்றனர். கிராமத்து படமாக உருவாகும் இந்த யானை பழனி, தூத்துக்குடி, ராமேஸ்வரம் போன்ற இடங்களில் படப்பிடிப்பு எடுக்கப்பட்டு தற்போது சென்னையில் அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறது.

இந்த படத்திற்கு யானை என்று பெயர் வைத்ததற்கான காரணம் குறித்து டைரக்டர் ஹரியிடம் கேட்டபோது சூர்யாவை வைத்து சிங்கம் எடுத்தது போன்று அருண் விஜய்யை வைத்து யானை எடுப்பதாக கூறியுள்ளார். அதோடு படத்தை பார்க்கும்போது யானையைப் போன்று பல மிக்கவனாக கதாநாயகன் இருப்பது தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *