சூப்பர் டீலக்ஸ் வசனத்தை தொடர்ந்து பிரபலமான விஜய் சேதுபதியின் மற்றொரு வசனம்

விஜய் சேதுபதி அவர்களின் அடுத்த படத்திற்கான டீஸர் வெளியாகி தற்போது சமூக வலைதளத்தில் முதலிடத்தை பிடித்து வைரலாகி வருகிறது..

                                            தற்பொழுது மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வரும் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் குறைந்த காலத்தில் அதிக படங்கள் நடித்து அதிக கதாபாத்திரத்தை கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்து ரசிகர்கள் மனதில் பெரும் மதிப்பையும் செல்வாக்கையும் குறைந்த காலத்தில் பெற்றுள்ளார்.

                                            சில வாரங்களுக்கு முன்பாக சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தின் டீஸர் ஆனதே வெளியிடப்பட்டது இந்த டீஸருக்கு மிகப் பெரிய அளவிலான வரவேற்பு என்பது கிடைத்தது ஏனென்றால் அந்த டீசருக்கு பின்னால் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் ஒரு வசனம் ஒன்றை பேசிக்கொண்டு இருக்க அந்த டீசர் காணொளி ஆனது  பல காட்சிகளை காண்பித்துக் கொண்டே இருக்கும் அந்த காட்சிகளுக்கு பின்னால் இருக்கும் விஜய் சேதுபதி அவர்களது வசனம் பலராலும் கவரப்பட்டு tic tok வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் போன்ற சமூகவலைத்தளங்களில் அதிகமாக பயன்படுத்தப் பட்டது  அனைவராலும் பேசப்பட்டது இன்றளவும் கூட அந்த வசனம் ஆனது  டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.

 இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் மற்றொரு திரைப்படமான சிந்துபாத் என்ற திரைப்படத்தின் டீசர் ஆனது வெளியிடப்பட்டு உள்ளது இந்த டீஸரிலும் பல காட்சிகள் வருகிறது அந்த காட்சிகளுக்கு பின்னால் விஜய் சேதுபதியின் மாஸ் டயலாக் ஆனது உள்ளது இந்த வசனமும் சூப்பர் டீலக்ஸ் வசனத்தைத் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இடம்பெற்று உள்ளது டீசர் வெளியாகி சில மணி நேரத்திலேயே பல பார்வையாளர்களை கவர்ந்து உள்ளது மேலும் இந்த திரைப்படமானது ரசிகர்களுக்கு ஒரு சிறந்த திரைப்படமாகவும் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் திரைப்படமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது