சிந்துபாத் யூடியூபில் சாதனை, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய்சேதுபதி .

சிந்துபாத் ட்ரெய்லர் 3 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்ததால் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

இந்த 2019 ஆம் ஆண்டில் விஜய் சேதுபதி அவர்கள் நடித்த திரைப்படம் ஆன பேட்டை திரைப்படம் திரைக்கு வந்து பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது மேலும் விஜய் சேதுபதி ரசிகர்களிடமும்  மகிழ்ச்சியை பெற்றுத்தந்தது ஆனால் அந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு கதாபாத்திரமாக  மட்டுமே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அதேபோல் தற்போது சில வாரங்களுக்கு முன்பு வெளியான சூப்பர் டீலக்ஸ் என்னும் திரைப்படத்தின் டிரைலர் வெளியானது அந்த திரைப்படத்திலும்  விஜய் சேதுபதி ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரமாக  மட்டுமே நடித்துள்ளார்.

இதனையடுத்து தற்போது வெளிவந்துள்ள சிந்துபாத் என்னும் திரைப்படத்தின் டீஸர் ஆனது முழுக்க முழுக்க விஜய்சேதுபதியை கதாநாயகனாக மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் ஆக உள்ளது பல நாட்களுக்குப் பிறகு மற்றும் இந்த 2019 ஆம் ஆண்டு விஜய்சேதுபதியை முழுக்க முழுக்க மையப்படுத்தி எடுக்கப்பட்ட முதல் திரைப்படமாக இந்த திரைப்படம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த திரைப்படம் முழுக்க முழுக்க சண்டை காட்சிகள் கொண்ட திரைப்படமாக இருக்கும்  என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது மேலும் இந்த சிந்துபாத் திரைப்படத்தில் அவர் பேசிய வசனம் ரசிகர்களிடையே அதிகம் பேசப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது இதனை அடுத்து வெளியான சில நாட்களிலேயே 3 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்து சாதனை படைத்துள்ளது ஒரு வளர்ந்து வரும் நடிகருக்கு இப்படி ஒரு சாதனை கிடைப்பது  என்பது அரிய விஷயம் ஆகவே விஜய் சேதுபதி ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர் மேலும் விஜய் சேதுபதி அவர்கள் இந்த சாதனையால் மனம் மகிழ்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.