சிம்ம ராசிக்கு…அலைச்சல் அதிகரிக்கும்… எதிர்பார்த்த வெற்றி கிட்டும்…!

சிம்ம ராசி அன்பர்களே…!      இன்று விமர்சனங்களால் ஏற்பட்ட விரிசல் மறையும்.  உத்தியோக உயர்வு கான அறிகுறிகள் தோன்றும். கல்யாணக் கனவுகள் நனவாகும். காரிய வெற்றிக்கு உடன்பிறப்புகள் உதவிகரமாக இருப்பார்கள். இன்று பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியமும் சீராகும். எல்லா நன்மையும் உண்டாகும். அனைத்து விஷயங்களிலும் வெற்றி கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சல், ஆட்கள் கிடைப்பதில் தாமதம் போன்றவை ஏற்பட்டாலும் கவலை கொள்ளாதீர்கள். அது சிறப்பாக வேலை நடக்கும். இன்று எதிர்பார்க்கும் வெற்றி கிடைப்பதற்கு கொஞ்சம் கடுமையாகத்தான் இருக்கும். ஆனால் எதைப்பற்றியும் தயவுசெய்து குழப்பிக்கொள்ள வேண்டாம். ஆலோசித்துத் தெளிவான முடிவுகளை எடுக்கக் கூடிய சூழலை அமைத்துக் கொள்ளுங்கள். கூடுமானவரை இறை வழிபாட்டுடன் காரியங்களை மேற்கொள்ளுங்கள்.

காதலர்களுக்கு இனிமையான நாளாக இருந்தாலும். கொஞ்சம் பொறுமையாக தான் செயல்பட வேண்டியிருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஊதா நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்கள்: 1 மற்றும் 4

அதிஷ்ட  நிறம்: ஊதா மற்றும் இளம் பச்சை நிறம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *