செம மாஸ்…! மன்மதன் லுக்கில் லூசு பெண்ணே பாடலுக்கு சிம்புவின் தெறிக்கவிடும் நடனம்…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் சிம்பு தற்போது சில்லுனு ஒரு காதல் மற்றும் நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி சங்கர் போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் முதல் 2 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. சென்னையில் நேற்று பத்து தல திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிம்பு தன் குடும்பத்துடன் கலந்து கொண்டார்.

அதன்பிறகு பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், ஏ.ஆர் ரகுமான் போன்ற பல திரை உலக பிரபலங்களும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர். இந்நிலையில் பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது நடிகர் சிம்பு லூசு பெண்ணே பாடலுக்கு நடனம் ஆடினார். கடந்த 2006-ம் ஆண்டு சிம்பு இயக்கி நடித்த வல்லவன் திரைப்படத்தில் இடம் பெற்ற லூசு பெண்ணே பாடலுக்கு நடிகர் சிம்பு மேடையில் நடனமாடிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. மேலும் சிம்பு தன்னுடைய அடுத்த படத்திற்காக தற்போது மன்மதன் லுக்குக்கு மாறியுள்ளார். நடிகர் சிம்புவின் புது லுக் மற்றும் தற்போது லூசு பெண்ணே பாடலுக்கு நடனமாடும் வீடியோ போன்றவைகள் சோசியல் மீடியாவில் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

Leave a Reply