சந்தானத்துடன் இணைகிறார் நடிகர் சிம்பு..!!

சந்தானத்துடன் இணைந்து நடிகர்  சிம்பு படம் இயக்க  திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன .

தமிழ் திரையுலகில் மன்மதன் திரைப்படத்தில் சிம்புவுடன் சேர்ந்து அறிமுகமாகிய காமெடி நாயகன் சந்தானம். தற்பொழுது கதாநாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். கதாநாயகனாக இவர் நடித்த பல படங்கள் மாபெரும் வெற்றியை இவருக்குப் பெற்றுத் தந்துள்ளது.

இந்நிலையில் நடிகர் சிம்பு சந்தானத்தை வைத்து படம் இயக்க திட்டமிட்டு உள்ளதாகவும், இதில் சந்தானம் கதாநாயகனாக நடிக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சந்தானத்துடன் சேர்ந்து நடிகர் சிம்புவும் நடிக்கப்போவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த  தகவலானது தற்போது வைரலாகி வருகிறது.

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *