மஹா படத்தில் ஹன்சிகா_வுடன் இணையும் சிம்பு…!!!

மஹா படத்தில் சிம்பு மற்றும் ஹன்சிகா இருவரும் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வளர்ந்து வரும் பிரபல நடிகையானா ஹன்சிகா, சிம்புவுடன் இணைந்து ஜோடியாக நடித்த படம் `வாலு. இப்படத்தில் நடித்த போது  இருவரும் காதலித்தனர், ஆனால் தங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடு காரணமாக இருவரும்  பிரிந்து விட்டனர். பிரிந்தாலும் கூட நாம் இருவரும் நண்பர்களாக இருப்போம் என்று கூறிய இவர்கள் இருவரும் இணைந்து மீண்டும்  ‘மஹா’ என்ற படத்தில் நடிக்கின்றனர்.

தொடர்புடைய படம்

இப்படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சிம்பு இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று போன் மூலம் ஹன்சிகா கேட்டபோது சிம்பு அதற்கு சம்மதம் தெரிவித்தார்.  இப்படத்தில் சிம்புவின் கதாபாத்திரம் குறைவாக வரும் என்று கூறப்பட்டது. ஆனால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்ததால் சிம்புவின் கதாபாத்திரம் 30நிமிடங்கள் வருமாறு கதை உருவாக்கப்பட்டுள்ளது.