சிலிண்டரில் பற்றி எரிந்த தீ…. துணிச்சலாக செயல்பட்ட பெண்…. தீயணைப்புத் துறையினரின் பாராட்டு….!!

பற்றி எரிந்த சிலிண்டரை துணிச்சலாக வெளியே கொண்டு வீசிய பெண்ணை தீயணைப்புத்துறை வீரர்கள் பாராட்டினர்.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ராட்டிணமங்கலம் ஈ.பி.நகர் பகுதியில் பிச்சாண்டி என்பவர் வசித்து வருகின்றார். இவர் அரசி ஆலை தொழிலாளியாக இருக்கின்றார். இவருக்கு தரணி என்ற மனைவி உள்ளார். இதில் தரணி மாலை வேளையில் சமையல் செய்வதற்காக வீட்டில் இருந்த சிலிண்டரை ஆன் செய்து அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது அதிலிருந்து ஏற்பட்ட கசிவு காரணமாக சிலிண்டருக்கு வெளியே திடீரென தீப்பற்றியது. இதனால் சுதாரித்துக்கொண்ட தரணி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெகுலேட்டரை உடனடியாக அகற்றிவிட்டு பற்றி எரிந்த சிலிண்டரை தூக்கிக்கொண்டு வீட்டிற்கு வெளியே வந்தார்.

அப்போது தரணி முகத்தின் மீது தீப்பற்றி கருகியதையும் பொருட்படுத்தாமல் அவர் துணிச்சலாக செயல்பட்டு பற்றி எரிந்த சிலிண்டரை வீட்டிற்கு வெளியில் தூக்கி வீசினார். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புத்துறை நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின்படி தீயணைப்பு நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இவ்வாறு முகம் கருகியதையும் பொருட்படுத்தாமல் துணிச்சலாக செயல்பட்ட தரணியை தீயணைப்புத்துறை வீரர்கள் பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *