“கைகொடுத்த கவர்ச்சி போட்டோ” மீண்டும் திரையில் தோன்றும் ஸ்ரேயா …!!

நடிகை ஸ்ரேயாவிற்கு அவரின் கவர்ச்சி போட்டோ_க்கள் கைகொடுத்ததால் மீண்டும் திரைப்பட வாய்ப்பை பெற்றுள்ளார்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா. அதன்பின் படவாய்ப்புகள் இல்லாமல் திரை உலகை விட்டு சற்று விலகி இருந்தார். அதன்பின் இவர் சிம்பு-வுடன் இணைந்து AAA படத்தில் நடித்துள்ளார். அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு கைகொடுக்கவில்லை.

இதையடுத்து படவாய்ப்புகாக கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தினார். தற்பொழுது அந்த போட்டோ அவருக்கு கை கொடுத்துள்ளது. இதனால் அவர் தமிழ் சினிமாவில் மறுபடியும் கால்தடம் பதித்துள்ளார். இவர் விமல் நடிக்கும் சண்டைகாரி தி‌ பாஸ் என்ற படத்தில் ஜோடியாக நடிக்கிறார். இந்தபடத்தின் சில புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.