கோழி குஞ்சை காப்பாற்ற சிறுவன் செய்த காரியம்….. வலைதளத்தில் குவியும் பாராட்டுக்கள்….!!

6 வயது சிறுவன், கோழிக்குஞ்சு மீது தெரியாமல் சைக்கிளை ஏற்றிய பின் அதனை காப்பாற்ற தான் சேமித்து வைத்திருந்த 10 ரூபாய் பணத்துடன் மருத்துவமனைக்கு சென்ற நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

மிசோரமை சேர்ந்த 6 வயது சிறுவனின் பெயர்  டெரிக். இச்சிறுவன்  சைக்கிள் ஓட்டிச்செல்லும் போது எதிர்பாராத விதமாக இறை தேடிக்கொண்டிருந்த பக்கத்து வீட்டின் கோழிக்குஞ்சு மீது சைக்கிளை ஏற்றிவிட்டான். இதனால் சற்று பதறிப்போன அந்த சிறுவன் எப்படியாவது அந்த  கோழிக்குஞ்சை காப்பாற்றியே ஆக  வேண்டும் என எண்ணி அதற்கு பல முயற்சிகளை எடுத்துள்ளான்.  கோழிக்குஞ்சு இறந்துகூடத் தெரியாமல் அச்சிறுவன் அதனை ஒரு கையில் எடுத்துக்கொண்டு மறு கையில் தான் சேமித்த  10 ரூபாய் பணத்தையும்  எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளான்.

Image result for 6 year old boy Derek from Mizoram

பின்னர் அங்கிருந்து வீடு வந்து ஒரு 100 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு மறுபடியும்  கோழிக்குஞ்சை காப்பாற்ற முயன்றுள்ளான் அந்த சிறுவன். அப்போது மருத்துவமனையில் இருந்த செவிலியர்கள் சிறுவனின் இந்த செயலை  கண்டு நெகழிந்து போயுள்ளனர். அத்துடன் சிறுவன் ஒரு கையில் 10 ரூபாய் பணமும், மறுகையில் இறந்து போன கோழிக்குஞ்சையும் வைத்திருந்த போது அந்த செவிலியர் புகைப்படம் ஒன்றையும் எடுத்துள்ளார். இந்த புகைப்படம்  சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பலரும்  தங்களது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.

Image result for 6 year old boy Derek from Mizoram

 

அவசர உலகமாக மாறிப்போன இக்காலகட்டத்தில்  சிலர் விபத்தினை  ஏற்படுத்திவிட்டு, நிற்காமல் சென்று விடுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்டோர் உடனே சிகிச்சை பெற முடியாமல் தவிக்கின்றனர். ஆனால் இந்த 6 வயது சிறுவன், தான் அந்த கோழி குஞ்சை ஏற்றிவிட்டோம் என்பதற்காக அதனை காப்பாற்ற மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நெகிழ்ச்சி சம்பவம் சிறுவனின் இளகிய மனதை மட்டுமில்லாமல், உண்மையான சமூக அக்கறையையும், சிறுவனின் அன்பையும் பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது.