தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்… அன்பில் மகேஷ் அறிவிப்பு…!!!

100 சதவீதம் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைப்பதற்கான இடங்கள் குறித்து அமைச்சர் பி டி ஆர், பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ் “மதுரையில் 70 கோடி ரூபாய் செலவில் இரண்டு லட்சம் சதுரடி பரப்பளவில் கலைஞர் நூலகம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். நூலகம் அமைப்பதற்கான தேர்வு செய்யப்பட்ட இடங்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து இந்த இக்கட்டான காலத்தில் சில தனியார் பள்ளிகள் முழு கட்டணம் வசூலித்து வருகின்றனர்.  இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். மேலும் கூடுதல் கட்டணம் தொடர்பாக பெற்றோர்கள் தயக்கமில்லாமல் புகார் அளிக்கலாம் என்று கூறியுள்ளார். இதையடுத்து பள்ளிகள் எப்போது வேண்டுமானாலும் திறக்கப்படும் என்பதால் ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *