சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி…. காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சண்டை..!!

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் 5 மணி நேரம் நடத்திய துப்பாக்கி சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜம்மு மற்றும் காஷ்மீரின், பாரமுல்லா மாவட்டத்தில், யெடிபோரா பட்டான் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்கள் மற்றும் போலீசார் அங்கு இருந்த மக்களை பாதுகாப்புடன் வெளியேற்றி அந்தப் பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் அங்கு தங்கியிருந்த பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.

இதனால் பாதுகாப்பு படையினருக்கும் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் இடையே கிட்டத்தட்ட 5 மணி நேரத்திற்கு மேலாக துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் பாதுகாப்புப் படையினர் ஒரு பயங்கரவாதியை சுட்டுக்கொன்றனர். படை வீரர்களில் ஒருவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *