அதிர்ச்சி அளிக்கும் தங்கம்…. சவரனுக்கு ரூ 160 உயர்வு….!!

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 160 அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்

கடந்த சில தினங்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது குறிப்பிட்ட அளவு விலை ஏறுவதும் , இறங்குவதுமாக இருந்த தங்கத்தின் விலை தற்போது சவரனுக்கு 160 ரூபாய் உயர்வு கண்டுள்ளது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ 160 உயர்ந்து 28,832_க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே 22 காரட் ஆபரணத் தங்கம் 1 கிராம்   ரூ 3604 விற்பனையாகின்றது. தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு கொண்டுள்ளதால் இன்னும்  உயருமா என்ற அச்சத்தில் உள்ளனர்.