தமிழகத்தில் நடைபெற்ற மூன்று சுற்று பொறியியல் கலந்தாய்வில் 35 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்பது அதிர்ச்சியளிக்கின்றது.
இது வரை நடைபெற்ற மூன்று சுற்று கலந்தாய்வின் முடிவில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி, சேலம் கைத்தறி தொழில்நுட்பக் கல்லூரி, சிவகங்கை சிக்ரி கல்லூரி என இந்த 3 கல்லூரிகளிளும் 100 சதவிகித இடங்களும் நிரம்பியுள்ளது. அதே போல 8 கல்லூரிகளில் 99 சதவிகிதத்திற்கும் அதிகமமான இடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது.

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விவரம் :
10 கல்லூரிகளில் 90 முதல் 98 சதவிகித இடம் நிரம்பியுள்ளது.
12 கல்லூரிகளில் 80 முதல் 89 சதவிகித இடம் நிரம்பியுள்ளது.
23 கல்லூரிகளில் 60 முதல் 79 சதவிகித இடம் நிரம்பியுள்ளது.
115 கல்லூரிகளில் 5 சதவிகிதத்திற்கும் குறைவாக மாணவர் சேர்க்கை நடந்துள்ளது.
15 கல்லூரிகளில் ஒரே ஒரு மாணவர் மட்டுமே சேர்ந்துள்ளனர்.
80 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
அதே ஆச்சரியமான , பரிதாபப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் 35 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை.