கர்நாடகாவில் தொடரும் அரசியல் குழப்பம்…நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் ஆர்ப்பட்டம்..!!

பாஜக ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுவதாக கூறி நாடாளுமன்ற வளாகத்தின் முன்  காங்கிரஸ் தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக  மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாவை சேர்ந்த 14 அதிருப்த்தி MLAக்கள் திடீரென ராஜினாமா செய்தனர்.அங்கு நடக்கும் ஆளும் கட்சியின் ஆட்சியை கவிழ்க்க பாஜக  சதி திட்டம் தீட்டி வருவதாக காங்-மதசார்பற்ற ஜனதா தள தலைவர்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில்,கோவாவிலும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 MLAக்கள் பாஜகவில் தங்களை முழு மனதுடன் இணைத்துக்கொண்டுள்ளனர்.

Image result for ராகுல் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்

இந்நிலையில் பாஜகவை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கக்கூடிய காந்தி சிலை முன்பு  காங்கிரஸ் கட்சி தலைவர்களான சோனியா காந்தி,ராகுல் காந்தி மற்றும் மூத்த தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.15 நிமிடங்களுக்கு மேல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்,பாஜக மறைவாக காங்கிரஸ் MLAக்களை விலைக்கு வாங்கி வருவதாகவும், அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.