அதிர்ந்து போன அமெரிக்கா.. ”ஆதிக்கம் செலுத்த போகும் கம்யூனிசம்”.. ஆய்வில் தகவல் …!!

அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வில் இடதுசாரிகளுக்கு ஒரு மகத்தான ஆதரவு இருப்பது வெளியாகியுள்ளது.

கம்யூனிச எதிர்ப்பை முன்னெடுக்கும் Victims of Communism Memorial Foundation என்னும் அமெரிக்க அமைப்பு கம்யூனிசக் கோட்பாடுகள் குறித்து அந்நாட்டு மக்கள் கொண்டுள்ள கருத்தை அறியும் விதமாக சமீபத்தில் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது.கணக்கெடுப்பின் முடிவுகள் மக்களின் கம்யூனிச எதிர்ப்புணர்வை வெளிக்காட்டும் என்று அந்த அமைப்பு எண்ணியது ஆனால் அந்தக் கணக்கெடுப்பு தந்த விவரங்கள், முற்றிலும் அதற்கு மாறானவையாக இருந்தது.

அந்த ஆய்வில் 36 விழுக்காடு அமெரிக்க இளைஞர்கள் கம்யூனிசத்தை அங்கீகரிக்கத் தயாராக இருப்பதாக முடிவுகள் சொல்லியது.மேலும் 23 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்களில் 70 விழுக்காடு இளைஞர்கள், அதிபர் பதவிக்கான போட்டியில் ஒரு சோசலிஸ்டு வேட்பாளரை ஆதரிக்கத் தயார் என்று சொல்லியிருக்கிறார்கள் என்று தெரிவித்த முடிவில் தனிச்சொத்து ஒழிக்கப்பட்டால் நல்லது என்று 22 விழுக்காடு இளைஞர்களும் தெரிவித்திருந்தனர்.

உயர்கல்வி முற்றிலும் இலவசமாக்கப்பட வேண்டும் என்று 45 விழுக்காடு பேர்களும் கோரியிருக்கிறார்கள்.உலகம் முழுவதும் வலதுசாரிகள் வலிமை பெற்று வருவது என்பது மக்களுக்கான நெருக்கடிகளும் அதிகரித்துவருவதற்கான சாத்தியங்களையும் ஏற்படுத்துகிறது மக்கள் நெருக்கடிகளை எதிர்த்துப்போராட இடதுசாரிகளை வரவேற்கவும் தயாராக இருக்கிறார்கள் என்பதையே இது காட்டுவதாக நான் நினைக்கிறேன்.

ஒரு பெரிய முதலாளித்துவ நாடக இருக்கும் அமெரிக்காவில்  இடதுசாரிகளுக்கான வாய்ப்பு இருப்பதாக அந்த ஆய்வு தெரிவித்தததால் உலக நாடுகளே இந்த ஆய்வின் முடிவை உற்று நோக்கியுள்ளது. முதலாளித்துவ நாடான அமெரிக்காவிற்கு அதிர்ச்சியை அளித்துள்ள இந்த முடிவு சாத்தியபட வேண்டுமெனில் மக்களை வென்றெடுப்பது இடதுசாரிகள் கையில் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *