ஷாக்!…. லுடோவில் தன்னையே பணயமாக வைத்த பெண்…. தோற்ற பின் நடந்த சம்பவத்தால் கதறும் கணவர்…..!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் பிரதாப்கர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் லூடோ விளையாட்டில் ஆர்வமாக இருந்த ஒரு பெண்மணி விளையாட பணம் இல்லாத காரணத்தால் தன்னையே அடகு வைத்து விளையாடியுள்ளார். இது குறித்து அந்த பெண்ணின் கணவர் கூறியதாவது, நானும் என்னுடைய மனைவியும் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் நான் வேலைக்காக ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்று விட்டேன். அங்கிருந்து 6 மாதங்களாக என்னுடைய மனைவிக்கு நான் அனுப்பி அனைத்து பணத்தையும் அவர் லூடோ விளையாட்டில் இழந்துள்ளார்.

நான் கடந்த 4-ம் தேதி வீடு திரும்பிய நிலையில் என்னுடைய மனைவி வீட்டில் இல்லை. நான் அவரை தேடிய போது வீட்டின்  உரிமையாளர் வீட்டில் இருந்தது தெரிய வந்தது. அதன் பின் நான்  என்னுடைய மனைவியை சென்று அழைத்த போது அவர் வர மறுத்துவிட்டார். அதோடு வீட்டின் உரிமையாளரும் என்னுடைய மனைவியை அனுப்ப மறுப்பு தெரிவித்தார். இதுகுறித்து நான் போலீசில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நான் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சென்று புகார் அளிக்க இருக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.