ஷாக்!…. ரூ. 27,000-த்துக்கு‌ பதில் வெறும்‌‌ ரூ. 1….. பயிர் காப்பீடு செய்திருந்த விவசாயிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…..!!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணா ரௌத். இவர் சோயா பீன்ஸ் விதைத்திருந்த நிலையில், மழையினால் மொத்தமும் சேதமடைந்து விட்டது. இதற்காக விவசாயி 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்து இருந்தார். இதன் காரணமாக பிரதமரின் காப்பீடு திட்டத்தின் கீழ் தனக்கு நிவாரணத் தொகை கிடைக்கும் என்று காத்திருந்தார். ஆனால் பயிர் காப்பீடு தொகையாக விவசாயின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட தொகையை பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்து விட்டார். அதாவது 1.76 ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று ஒருவருக்கு 14.21 ரூபாயும், மற்றொருவருக்கு 37.31 ரூபாயும் வரவு வைக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக விவசாயி கூறுகையில் பயிர் காப்பீட்டுக்காக 455 ரூபாயும், இழப்பை அளவிட 200 ரூபாயும் கட்டணமாக செலுத்தி இருந்தேன். எங்களுக்கு 27 ஆயிரம் வரை பயிர் காப்பீடு கிடைக்கும் என்று காத்திருந்த நிலையில் வெறும், 1 ரூபாய் மட்டும் தான் வரவு வைக்கப்பட்டுள்ளது என்று வேதனையோடு கூறியுள்ளார். மேலும் சில நூறு ரூபாய்களை செலவு செய்து பயிர் காப்பீடு செய்தவர்களுக்கு அதிகபட்சமாக 73 ரூபாய் கொடுக்கப்படுகிறது.