ஷாக்!… நாளுக்கு நாள் மோசமாகும் உடல்நிலை…. சிகிச்சைக்காக தென் கொரியா செல்லும் சமந்தா?….. ரசிகர்கள் பிரார்த்தனை….!!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் அண்மையில் யசோதா திரைப்படம் ரிலீஸ் ஆகி பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. இவர் தற்போது விஜய் தேவரகொண்டவுடன் இணைந்து குஷி மற்றும் சகுந்தலம் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் மயோசிடிஸ் என்னும் அரிய வகை சரும அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்ட சமந்தா அதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இருப்பினும் நடிகை சமந்தாவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருவதாக இணையதளங்களில் தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது.

இந்த நோயின் காரணமாக கேரளாவுக்கு சென்று நடிகை சமந்தா ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால் தற்போது நடிகை சமந்தா தென்கொரியா செல்ல இருப்பதாகவும், அங்கு 3 மாதங்கள் வரை தங்கியிருந்து  சிகிச்சை எடுக்க இருப்பதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நடிகை சமந்தாவின் உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்து நாளுக்கு நாள் வெளியாகும் தகவல்களால் ரசிகர்கள் கவலை அடைந்ததோடு, சமந்தா விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனையும் செய்து வருகிறார்கள்.