அதிர்ச்சி ”பிஞ்சு குழந்தை”! …உயிரை குடிக்கும் நெஸ்லே….!! ஆய்வில் உறுதி ……

நான் எக்சல்லோ ப்ரோ பால் பவுடர் சட்ட விதிப்படி முற்றிலும் பாதுகாப்பானது என்கிறது நெஸ்லே நிறுவனம்.

பாதிக்கப்பட்ட நபரின் 6 மாத குழந்தைக்கு தாய் பாலுக்கு பதிலாக மருத்துவர் பரிந்துரை செய்த நெஸ்லே நிறுவனத்தின் நெஸ்லே நான்  ப்ரோ பால் பவுடர் குழந்தைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கொடுக்க துவக்கத்திலிருந்தே குழந்தைக்கு தொடர்ந்து வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. பால் பவுடரின் தரத்தில் சந்தேகமடைந்த தந்தை சம்பந்தப்பட்ட பால்பவுடர் நிறுவனத்தை அணுகி உள்ளார்.அவர்களும் வீட்டிற்கே வந்து ஆய்வு நடத்திவிட்டு உங்களுக்கு அறிக்கை தருகின்றோம் என்று சென்றுவிட்டு எந்த பதிலும் கொடுக்காமல் இருந்துள்ளனர்.

Image result for குழந்தைகளுக்கு பால் பவுடர்

இந்தநிலையில் தான் தந்தை வீட்டில் இருந்த மற்றொரு பால் பவுடரை வைத்துக் கொண்டு தமிழக உணவு பாதுகாப்புத் துறையிடம் இவர் அளித்த புகாரையடுத்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பால் பவுடரை ஆய்வுக்கு அனுப்பினர். அதில் ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன ? சோதனையில் பரிந்துரைக்கப்பட்ட அளவான 0.1 சதவீதத்தை விட குறைவாக இருக்க வேண்டிய அசிட் இன்சாலிபில் ஆஸ் என்ற மூலப்பொருள் 0.27 % சதவீதம் உள்ளது இருப்பது தெரியவந்துள்ளது.

ஈஸ்ட் & மோல்ட் கவுண்ட் சோதனையில் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகளவு பூஞ்சை இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் பால் பவுடரில் பாக்டீரியா வளர்ச்சி உள்ளதா ? என்பதை கண்டறிய செய்யப்பட்ட சோதனையில் வரையறுக்கப்பட்ட அளவை விட ஐந்து மடங்கு அதிகம் இருப்பது உறுதியானது. இதனால் சிறு குழந்தைகளுக்கு சிறுநீர் பிரச்சனை , கல்லீரல் பிரச்சனை ஏற்படலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

Image result for குழந்தைகளுக்கு பால் பவுடர்

முடிவுகளின் அடிப்படையில் அரசின் உணவு பாதுகாப்பு துறை சட்டத்தின்படி ஆய்வுக்குட்படுத்திய நெஸ்லே பால் பவுடர் மனித பயன்பாட்டிற்கு உகந்ததல்ல என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். ஆய்வு முடிவுகளை பெற்ற உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கெட்டுப்போன பால் பவுடர் விற்பனை செய்த நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளனர்.

ஆனால் தங்களது பால் பவுடர் தயாரிப்பில் எந்த குறையும் இல்லை என்று நெஸ்லே நிறுவனம் மறுத்துள்ளது.சட்டப்படி அங்கீகாரம் பெறாத ஆய்வுக்கு உட்பட்டு நடத்தப்பட்ட இந்தச் சோதனை மறுப்பதாக நெஸ்லே நிறுவனம் தெரிவித்துள்ளது. நெஸ்லே நான்  ப்ரோ பவுடர் பால் பவுடர் சட்ட விதிகளின்படி முற்றிலும் பாதுகாப்பானது என்கிறது நெஸ்லே.

Image result for nestle nan pro

NAPL அங்கீகாரம் பெற்ற ஆய்வுக் கூடத்தில் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பால் பவுடரில் மாதிரிகளை சோதித்ததில் அவை முற்றிலும் பாதுகாப்பானது என்பது உறுதியாகி உள்ளதாக நெஸ்லே கூறியுள்ளது. ஒவ்வொரு பால் பவுடர் பாக்கெட்டுகளை யும் சந்தைக்கு அனுப்பும் முன்பு உரிய சோதனைகள் செய்வதோடு முறையாகக் கண்காணிக்க படுவதாகவும் நெஸ்லே தெரிவிக்கிறது.

ஆய்வு அறிக்கையை நெஸ்லே நிறுவனம் மறுத்துள்ள நிலையில் இந்த விவகாரத்தை சட்டரீதியாக முன்னெடுக்கப் போவதாக தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். உரிய விசாரணை நடக்குமா ? என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். ஏற்கனவே ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடரில் உயிர்கொல்லி இருப்பது உறுதியாகிய நிலையில் அந்நிறுவனம் ஏற்றுமதி செய்த பொருட்களை திருப்ப பெற்று ஆய்வு ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *