அதிர்ச்சி.! இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 700-ஐ நெருங்கியது.!!

உலகையே அச்சுறுத்தி வரும்கொரானா  வைரஸ் ஒவ்வொரு நாடுகளிலும் மரணத்தை ஏற்படுத்தி  கதிகலங்க வைத்து வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி  வருகிறது. இந்தியாவைப் பொருத்தவரை மகாராஷ்டிராவில் 121 , கேரளாவில் 110 பேரும்  சிகிச்சை பெற்று வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் இதன் தாக்கம்  அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் இந்த  வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 694 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து அதிகரித்துவரும் எண்ணிக்கையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். முன்னதாக 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 45 பேர் குணமடைந்து உள்ளனர். மத்திய மாநில அரசுகள் கொரானாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *