வாழைப்பழம் சாப்பிடும் ஷிவானியை வடிவேலுவுடன் இணைத்து மீம்ஸ் போட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் பகல் நிலவு தொடர் மூலமாக தமிழில் அறிமுகமாகினார். இதன் பின்னர் கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் நடித்து வந்தார். இதையடுத்து இரட்டை ரோஜா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வந்தார். பின்னர் கொரோனா ஊரடங்கில் வீட்டில் போட்டோ ஹூட், வீடியோ, டான்ஸ் மற்றும் சிங்கிங் என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை கவர்ந்து வந்தார்.
தற்போது ஷிவானி நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கிறார். இந்நிலையில் நேற்று நடந்த எபிசோடில் ஷிவானி வாழைப்பழத்தை சாப்பிடும் காட்சி வெளியானது. இந்த காட்சியை நெட்டிசன்கள் வடிவேலுடன் இணைத்து மீம்ஸ் கிரியேட் செய்து தற்போது கலாய்த்து வருகிறார்கள்.