முடி உதிர்வு பிரச்சனையை போக்கும் சீயக்காய் தூள் – வீட்டிலேயே தயாரிக்கலாம்!

நீளமான, அடர்த்தியான கூந்தல் இருக்க வேண்டும் என்ற ஆசை அனைத்து பெண்களுக்கும் இருக்கும். ஆனால் இன்றைய காலத்தில் அலைச்சல், பணி சுமை, மன அழுத்தம், கெமிக்கல் நிறைந்த ஷாம்பூ போன்ற காரணங்களால் கூந்தல் உதிர்வு அனைவருக்கும் இருக்கும் ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது.

இது பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் சந்திக்கும் பிரச்சனையாக மாறி வருகிறது. இவற்றில் இருந்து விடுபட இயற்கை முறையில் தயாரித்து பயன்படுத்தும் சீயக்காய் தூள் தான் நிரந்தர தீர்வை தரும். வீட்டிலேயே சீயக்காய் தூள் அரைக்க என்னனென்ன பொருட்கள் சேர்க்க வேண்டும் என்பது குறித்து காண்போம்.

தேவையான பொருட்கள் :

சீயக்காய்  – 1 கிலோ,
செம்பருத்திப்பூ- 3 கப் ,
வெந்தயம் – 100 கிராம்,
பூலாங்கிழங்கு – 100 கிராம்,
எலுமிச்சை தோல் – 25,
பயத்தம் பருப்பு – 1/4 கிலோ,
காய்ந்த நெல்லி – 100 கிராம்,
கார்போக அரிசி – 100 கிராம்,
பூவந்திக் கொட்டை – 100 கிராம்,
செம்பருத்தி பூ, இலை – 50 கிராம்,
ஆவாரம்பூ – 100 கிராம்,
மரிக்கொழுந்து – 100 கிராம்.
கரிசலாங்கண்ணி இலை – 1 கப்.

மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் வெயிலில் 2 நாட்கள் வைத்து நன்றாக காய்ந்த பின் மிஷினில் கொடுத்து அரைத்து கொள்ள வேண்டும். தலைக்கு குளிக்கும் முன்னர் தலையில் எண்ணெய் தடவி 10 நிமிடம் கழித்து சீயக்காய் குழைத்து 15 நிமிடங்கள் ஊறவைத்து, அலசினால் கூந்தல் மிருதுவாக இருக்கும்.

சீயக்காய் தூள் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் :

  • கூந்தல் பிரச்சனை இருப்பவர்கள் வாரம் இருமுறை சீயக்காய் தூள் போட்டு தலைக்கு குளித்து வரலாம். சீயக்காயை கூந்தலுக்கு பயன்படுத்துவதால் கூந்தல் உதிர்வது, இளநரை, பொடுகு, அரிப்பு போன்ற கூந்தல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீரும்.
  • கூந்தலுக்கு ஒரு தலைசிறந்த இயற்கை சுத்திகரிப்பானாக சீயக்காய் செயல்படும். மேலும் ரசாயனம் கலந்த ஷாம்புவில் இருந்து உங்கள் தலைச்சருமம் பாதுகாக்கப்படுகிறது.
  • சீயக்காயிலோ பி.எச். அளவு குறைவாக இருக்கும். இதனை பயன்படுத்தும் போது உங்கள் கூந்தல் மிருதுவாக மாறும், கூந்தலை வறட்சியாக்காது.
  • சீயக்காய் பயன்படுத்திய பிறகு தனியாக கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. இது இயற்கையிலே முடியை மென்மையாக்கும் குணம் கொண்டது.