“சதம் அடித்த ஹிட் மேன்” இந்திய அணி அதிரடி ரன் குவிப்பு…!!

வங்கதேசம் அணிக்கெதிரான போட்டியில் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி சதம் அடித்துள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று நடைபெறும் 40-வது லீக் ஆட்டத்தில் இந்தியா வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி  பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக ராகுல் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர். இருவரும் தனது ஆதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தனர்.

அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சத்தத்தை கடந்த நிலையில் ஹிட் மேன் ரோஹித் சர்மா சதம் விளாசினார். சதம் அடித்து அசத்திய ரோஹித் 104 ரன்கள் எடுத்த நிலையில் சவுமியா சர்க்கார் பந்துவீச்சில் தூரதிஸ்டவசமாக ஆட்டமிழந்தார் . இந்திய அணி சார்பில் பின்னர் களமிறக்கிய கேப்டன் விராட் கோலி ஆட தொடங்கிய சிறிய நேரத்தில் ராகுலும் 77 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். தற்போது இந்திய அணி 32.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் குவித்துள்ளது.