போடு செம..! பதான் ரிலீஸுக்கு முன்பே பல்வேறு சாதனைகள்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

நடிகர் ஷாருக்கானின் ‘பதான்’ படம் நாளை வெளியாக உள்ளது. ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ள இப்படத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம், டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 4 வருட இடைவெளிக்குப் பிறகு, நடிகர் ஷாருக்கானின் படம் நாளை வெளியாவதால், முன்பதிவு டிக்கெட் விற்பனை இந்தியாவிலும் வெளிநாட்டிலும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ஆன்லைன் டிக்கெட் விற்பனை சுமார் 10 லட்சம் வரை ஏற்கனவே விற்கப்பட்டுள்ளன. எனவே இதைப் பற்றி சர்வதேச விநியோக துணைத் தலைவர் நெல்சன் டிசோசா கூறியுள்ளதாவது, ஷாருக்கான் நடித்த பதான் படம்  இதுவரை இந்தியப் படங்களிலேயே இல்லாத அளவுக்கு 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இப்படம் வெளியாகிறது.

மேலும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது. இதனையடுத்து புக் மை ஷோவின் தகவல் படி, இந்திக்கு அடுத்தபடியாக பதானின் தெலுங்கு பதிப்பில் அதிக முன்பதிவு டிக்கெட் விற்பனையாகி உள்ளது. சைபீரியாவில் உறைந்த பைக்கால் ஏரியில் பதான் படம் எடுக்கப்பட்டு, அங்கு படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் என்ற பெருமையும் பெற்றுள்ளது.