ஷங்கரின் அரசியல் படம்…. முதல்வராக ராம்சரண்… வெளியான தகவல்…!!

இயக்குனர் ஷங்கரின் அடுத்த படத்தில் ராம்சரண் முதல்வராக நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ஷங்கர். இவர் கமலஹாசனின் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார். ஆனால் கமல்ஹாசன் தற்போது அரசியலில் பிசியாக இருப்பதால் இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக இயக்க உள்ள புதிய படத்தின் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி ஷங்கரின் அடுத்த படத்தில் ராம்சரண் நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் அரசியல் சார்ந்ததாகவும்,இப்படத்தில் ராம் சரண் முதல்வராக நடிக்க உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இப்படத்தை ரிலீஸ் செய்ய ஷங்கர் திட்டமிட்டுள்ளார்.