“அர்ஜுன் ரெட்டி போல் ஒருவர் கிடைத்தால் நிச்சயம் லவ் பண்ணுவேன்” – ஷாலினி பாண்டே..!!

அர்ஜுன் ரெட்டி படத்தின் ஹீரோ  போல் ஒருவர் கிடைத்தால் நிச்சயம் காதல்  செய்வேன் என்று  ஷாலினி பாண்டே, தெரிவித்துள்ளார். 

நடிகை ஷாலினி பாண்டே கூறியதாவது  “படிக்கும்போதே சினிமாவில் நடிக்க எனக்கு ஆர்வம் இருந்தது. ஆனால் என் அப்பாவுக்கு நான் நடிகையாவதில் துளியும் விருப்பம் இல்லை. அதனால் என்னை ஏதாவது ஒரு  வேலைக்கு செல்லும்படி வற்புறுத்தும் விதமாக கூறினார்.இருந்த போதிலும் நான் மும்பையில் தங்கி சினிமா வாய்ப்புக்காக தேடி அலைந்தேன்.அப்போது நான் சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டப்பட்டேன் அப்படி இருந்த நிலையில் பின்னர் தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படத்துக்கு தேர்வாகி படப்பிடிப்பில் பங்கேற்றேன்.
Image result for விஜய் தேவர்கொண்டா  ஷாலினி பாண்டே
இதனையடுத்து படத்தின்  இயக்குனரிடம் முத்த காட்சிகள் மற்றும் மிகவும்  நெருக்கமான காட்சிகள் இருக்கக்கூடாது என எனது அப்பா  கண்டிப்பாக கூறினார். இந்த படம் திரைக்கு வந்ததும் எனக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும்,எனது அப்பாவிடமிருந்தும் பெரிய பாராட்டுகள் குவிந்தன. நிஜ வாழ்க்கையில் நடிகர் அர்ஜுன் ரெட்டி போல் ஒருவர் கிடைத்தால் நிச்சயம் நான் காதலிப்பேன். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தான்  தமிழில் நிறைய பட வாய்ப்புகள் வந்துள்ளன.
Image result for விஜய் தேவர்கொண்டா  ஷாலினி பாண்டே
இரண்டு  வருட சினிமா பயணத்தில் நான்  நிறைய கற்றுக்கொண்டேன். சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள்   வெளியிடுவதில் எனக்கு  விருப்பம் இல்லை. மேலும் நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் மணிரத்னம் ஆகியோருக்கு நான் தீவிர ரசிகையாக இருக்கிறேன். உணவு கட்டுப்பாடு இல்லை. நான் வாரத்தில் 5 நாட்கள் உடற்பயிற்சி செய்வேன். நன்கு புத்தகங்கள் படிப்பேன். எனக்கு தோழிகள் அதிகம் கிடையாது  குறைவு தான் .” இவ்வாறு அவர் கூறினார்.