ஆட்டம் போட்ட வன்முறை…. ”அடக்கியது அரசாங்கம்”….4,000 பேர் கைது …!!

ஜம்முவில் வன்முறையில் ஈடுபட்ட 4000 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு சட்டப்பிரிவை இரத்து செய்த மத்திய அரசு ஜம்முவை இரண்டு யூனியன் பிரதேஷமாக பிரித்தது.இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளும் முன்பாக அதிக இராணு படை வீரர்களை குவித்து , பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து விட்டு , 144 தடை உத்தரவை பிறப்பித்ததோடு முக்கிய தலைவர்கள் மற்றும் முன்னாள் முதல்வர்களை வீட்டுக் காவலில் வைத்து விட்டு இந்த நடவடிக்கையை மத்திய அரசு நிறைவேற்றியது.

காஷ்மீர்

இதை தொடர்ந்து பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவம் நிகழலாம் என்று அங்கு இணைய சேவையை தூண்டிக்கவும் செய்தது மத்திய அரசு. தற்போது அங்கு முதல் சுதந்திர தினமாக ஆகஸ்ட் 15 கொண்டாடப்பட்டு கட்டுப்பாடுகள் சிறிது சிறிதாக தளர்த்தப்பட்டு வந்தது.நேற்று முன்தினம் அங்குள்ள பல பகுதிகளில் இருந்த 144 தடை உத்தரவு நீக்கப்பட்டு , தொலைபேசி , இணைய தள சேவை வழங்கப்பட்டது.

காஷ்மீரில் பதற்றம் நீடிப்பு - 4 ஆயிரம் பேர் கைது

இணைய சேவை வழங்கப்பட்டது முதல் சிலர் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பியதுடன், பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டனர்.  இதனால் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரக்காரர்களை ராணுவம் மற்றும் போலீஸார் விரட்டிய நிலையில் அங்கு மீண்டும் இணைய சேவை முடக்கப்பட்டது.இதை தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் போலீஸ் மற்றும் இராணுவத்தினர் மீது கல்வீச்சு சம்பவத்தை நிகழ்த்தியவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் வேளையில் இராணுவம் மற்றும் போலீஸாரும் ஈடுபட்டனர்.

Image result for jammu

மேலும் சமூகவலைத்தளத்தில் வன்முறை வதந்தி வீடியோ பரப்புவதையும் கருத்தில் கொண்டு போலீசாருடன் இணைந்து இராணுவத்தினரும் தேடுதல் வேட்டை  நடத்தினர்.நேற்று வரை போலீஸ் மற்றும் இராணுவத்தில் தேடுதல் வேட்டையில் 4 ஆயிரம் பேர்  பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ்  கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களை விசாரணையின்றி 2 ஆண்டுகள் வரை சிறை வைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.