அட்லி இயக்கத்தில் விஜயுடன் இணையும் ஷாருக்கான்….!!!


அட்லி இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

அட்லி இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார். இதில் நயன்தாரா கதாநாயகியாக  நடிக்கிறார். வில்லனாக கதிர், ஜாக்கி ஷெராப் ஆகியோரும் உள்ளனர். படப்பிடிப்பு சென்னையில் பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

விஜய்,ஷாருக்கான் க்கான பட முடிவு

 

தற்போது இந்த படத்தில் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் குருக்ராம் காவல் நிலையம் என்ற பெயரில் அரங்கு அமைத்துள்ளனர். இதனால் ஷாருக்கான் போலீஸ் அதிகாரியாக நடிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் விஜய் ரசிகர்களிடையே  மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இப்படம் தீபாவளிக்கு  வெளிவரும் என்று கூறப்படுகிறது.

.