“சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞர் கைது “போலீசார் அதிரடி !!..

சென்னையில் 15 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த  வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னையில்  லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருபவர் பாலச்சந்திரன். இவர் ஆவடியில் தனது மனைவி மற்றும் பெண்குழந்தையுடன் வசித்து வந்தார் . இந்நிலையில் பக்கத்து வீட்டில் உள்ள சிறுமியை அடிக்கடி  பாலியல் தொந்தரவு செய்வதாக ஏற்கனவே இவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் கடந்த 18 ஆம் தேதி தேர்தலில் வாக்களிக்க சென்ற பொழுது பாலசந்திரன் அந்த சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார் .பின் சிறுமி பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது
அதன்பின் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்திய காவல்துறையினர்  பாலச்சந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்