“பாலியல் புகார்”….. மெல்ல மெல்ல கொல்லும் விஷம் கொடுத்து தீர்த்துக்கட்ட சதி திட்டம்….. சரிதா நாயர் பகீர் குற்றச்சாட்டு…..!!!!!!

கேரளா மற்றும் தமிழ்நாட்டில் சோலார் பேனர் அமைத்து தருவதாக கூறி பல லட்சக்கணக்கில் பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது. அந்த புகாரின் படி தொழிலதிபர் சரிதா நாயர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில், அப்போதைய முதல்வர் உம்மன் சாண்டி உட்பட பல அரசியல் பிரமுகர்கள் மீது பாலியல் புகார் சுமத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் சரிதா நாயர் தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த சில மாதங்களுக்கு முன்பாக எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் இடது கண்ணிலும் பார்வை குறைபாடு ஏற்பட்டது. அதோடு முடியும் அதிகமாக கொட்டியதால் நான் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றேன். அப்போது என்னுடைய ரத்தத்தில் அதிக அளவில் ஈயம், பாதரசம் மற்றும் ஆர்சனிக் போன்ற விஷத்தன்மை வாய்ந்த ரசாயனங்கள் கலந்து இருப்பதாக மருத்துவர் கூறினார்.

எனக்கு மெல்ல மெல்ல கொல்லும் விஷத்தை கலந்து கொடுத்து இருக்கிறார்கள். இந்த ரசாயனங்களால் நான் கூடிய விரைவில் இறந்து விடுவேன். நான் குடிக்கும் பழரசத்தில் என்னுடைய டிரைவர் வினுகுமார் ஏதோ ஒன்றினை கலந்ததை நான் பார்த்ததால் அவரை வேலையில் இருந்து நீக்கி விட்டேன். மேலும் என்னை கொல்வதற்கு சதி திட்டம் தீட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்துள்ளார்.