செல்ஃபீ எடுத்து பிரசாரம் ……. அசத்திய ஸ்டாலின்……. வழிநெடுகிலும் வரவேற்ப்பு…!!

திருவாரூரில் ஸ்டாலின் பிரசாரம் நடத்திய போது குழந்தைகளுடன் செலஃபீ எடுத்து பிரசாரம் செய்தது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது .

மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி  தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுமென இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட தேர்தலாக ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற  மற்றம் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் , இடதுசாரிகள் , மதிமுக , விசிக ,  இந்திய ஜனநாயக  கட்சி , கொ.ம.தே.க மற்றும் இ.யூ.மூ.லீ உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன .

Related image

இந்நிலையில் இன்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திருவாரூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். இதில் அவர் திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் பூண்டி கலைவாணன் மற்றும் திருவாரூர் பாராளுமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜு_க்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.அப்போது ஸ்டாலினுக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது . மேலும் திமுக தலைவர் பிரசார வழியெங்கும் குழந்தைகளுடன் செலஃபீ எடுத்து தேர்தல் பிரசாரம் செய்தது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.