கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை…. கணவருடன் போட்டோ ஷூட்…. குவியும் லைக்ஸ்…!!

கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை அவர் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி. இதைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து பிரபலமான இவர் தற்போது பூவேஉனக்காக மற்றும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி தான் கர்ப்பமாக இருக்கும் இன்ப செய்தியை வெளியிட்டார். இவருக்கு பல பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் கர்ப்பமாக இருக்கும் ஸ்ரீதேவி தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.