வரலாற்றில் இன்று செப்டம்பர் 23…!!

இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 23

கிரிகோரியன் ஆண்டு : 266_ஆம் நாளாகும்.

நெட்டாண்டு : 267_ஆம் நாள்

ஆண்டு முடிவிற்கு  : 99 நாட்கள் உள்ளன.

 

இன்றைய தின நிகழ்வுகள்:

1338 – நூறாண்டுப் போர்: முதலாவது கடற்படைச் சமர் இடம்பெற்றது. வரலாற்றில் முதல் தடவையாக வெடிமருந்துகளுடனான பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டன.

1409 – 1368 வெற்றியின் பின்னர் முக்கிய வெற்றியை மிங் சீனா மீதான சமரில் மங்கோலியர்கள் பெற்றனர்.

1459 – ரோசாப்பூப் போர்கள்: முதலாவது முக்கிய சமர் புளோர் கீத் என்ற இடத்தில் நடைபெற்றது.

1641 – 100,000 பவுண்டு எடை தங்கத்துடன் த மேர்ச்சண்ட் ராயல் என்ற ஆங்கிலேயக் கப்பல் மூழ்கியது.

1780 – அமெரிக்கப் புரட்சி: பிரித்தானிய இராணுவத் தளபதி ஜான் அன்ட்ரே உளவுக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

1799 – இலங்கையில் அரச ஆணைப்படி சித்திரவதை, மற்றும் கொடூரமான தண்டனைகள் நிறுத்தப்பட்டன. மத சுதந்திரம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

1803 – இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர்: அசாயே என்ற இடத்தில் பிரித்தானியாவுக்கும் மராட்டியப் பேரரசுக்கும் இடையில் இடம்பெற்றது.

1806 – லூயிசும் கிளார்க்கும் அமெரிக்காவின் வடமேற்குப் பசிபிக் பிராந்தியத் தேடல் முயற்சியை முடித்துக் கொண்டு செயின்ட் லூயீசுக்குத் திரும்பினர்.

1821 – திரிப்பொலீத்சா நகரைக் கிரேக்கர்கள் தாக்கி 30,000 துருக்கியரைக் கொன்றனர்.

1846 – நெப்டியூன் கோள் உர்பெயின் ஜோசப், ஜோன் அடம்ஸ், யோகான் கோட்பிரீடு கல்லே ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது.

1868 – எசுப்பானிய ஆட்சிக்கு எதிராக புவெர்ட்டோ ரிக்கோவில் கிளர்ச்சி இடம்பெற்றது.

1868 – புவெர்ட்டோ ரிக்கோவில் எசுப்பானிய ஆட்சியாளருக்கெதிராகக் கிளர்ச்சி ஆரம்பமானது.

1889 – நின்டெண்டோ நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

1905 – நோர்வேயும் சுவீடனும் அமைதியாகப் பிரிவதற்கு உடன்பட்டன.

1913 – பிரான்சின் ரோலண்டு காரொசு என்பவர் நடுநிலக் கடலை முதல் முதலாக வானூர்தியில் கடந்து சாதனை படைத்தார்.

1932 – இப்னு சவூது தலைமையில் சவூதி அரேபியா ஒன்றிணைந்தது.

1943 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி பொம்மை அரசு இத்தாலிய சோசலிசக் குடியரசு உருவானது.

1950 – கொரியப் போர்: அமெரிக்கப் படைகள் தவறுதலாக பிரித்தானியப் படைகள் மீது நேப்பாம் குண்டுகளை வீசினர். 17 பேர் கொல்லப்பட்டு 79 பேர் காயமடைந்தானர்.

1965 – இந்திய-பாகிஸ்தான் போர், 1965 முடிவுக்கு வந்தது.

1966 – நாசாவின் சேர்வெயர் 2 விண்கலம் சந்திரனின் கோர்ப்பனிக்கஸ் என்ற இடத்தில் மோதியது.

1980 – பாடகர் பாப் மார்லி தனது கடைசி நிகழ்ச்சியை பிட்ஸ்பர்க், பென்சில்வேனியாவில் நடத்தினார்.

1983 – மட்டக்களப்பு சிறை உடைப்பு: இலங்கை மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்த 41 தமிழ் அரசியற் கைதிகள் சிறையை உடைத்துத் தப்பினர்.

1983 – செயிண்ட் கிட்சும் நெவிசும் ஐக்கிய நாடுகளில் இணைந்தது.

1983 – கல்ஃப் ஏர் விமானம் குண்டு ஒன்றினால் தகர்க்கப்பட்டதில் அதில் பயணம் செய்த அனைத்து 117 பேரும் கொல்லப்பட்டனர்.

1986 – இலங்கை கொழும்பில் தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டது.

2002 – மொசிலா பயர் பாக்சு இணைய உலாவி வெளிவந்தது.

2004 – எயிட்டியில் சூறாவளி மற்றும் வெள்ளம் காரணமாக 3,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

2008 – பின்லாந்தில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

இன்றைய தின பிறப்புகள் : 

கிமு 63 – அகஸ்ட்டஸ், உரோமைப் பேரரசர் (இ. 14)

1215 – குப்லாய் கான், மொங்கோலியப் பேரரசர் (இ. 1294)

1791 – யோகான் பிரான்சு என்கே, செருமானிய வானியலாளர் (இ. 1865)

1851 – எல்லன் காயேசு, அமெரிக்கக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1930)

1869 – டைஃபாய்டு மேரி, அமெரிக்க சமையற்கலை நிபுணர் (இ. 1938)

1871 – பிரான்டிசேக் குப்கா, செக் நாட்டு ஓவியர் (இ. 1957)

1882 – ஆல்பிரெடு ஆரிசன் ஜாய், அமெரிக்க வானியலாளர் (இ. 1973)

1895 – ஹரி சிங், ஜம்மு காஷ்மீர் சுதேச சமஸ்தானத்தின் இறுதி டோக்ரா குல மன்னர் (இ. 1961)

1900 – எஸ். குலேந்திரன், தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாணத்தின் 1வது ஆயர் (இ. 1992)

1908 – ராம்தாரி சிங் திங்கர், இந்திக் கவிஞர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், கல்வியாளர், அரசியல்வாதி (இ. 1974)

1917 – அசீமா சாட்டர்ஜி, இந்திய வேதியியலாளர் (இ. 2006)

1923 – கு. அழகிரிசாமி, தமிழக எழுத்தாளர் (இ. 1970)

1930 – ரே சார்ல்ஸ், அமெரிக்கப் பாடகர், நடிகர் (இ. 2004)

1933 – மது, மலையாளத் திரைப்பட நடிகர்

1941 – நவநீதம் பிள்ளை, தென்னாபிரிக்க நீதிபதி, முன்னாள் ஐநா மனித உரிமை ஆணையாளர்

1943 – தனுஜா, இந்தித் திரைப்பட நடிகை

1957 – குமார் சானு, இந்தியப் பாடகர், தயாரிப்பாளர்

1962 – ஷோபா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 1980)

1971 – முயீன் கான், பாக்கித்தானியத் துடுப்பாளர்

1982 – ரதி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

1988 – டெல் போட்ரோ, அர்ச்செந்தீன டென்னிசு வீரர்

இன்றைய தின இறப்புகள் : 

1877 – உர்பைன் லெவெரியே, பிரான்சியக் கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1811)

1939 – சிக்மண்ட் பிராய்ட், ஆத்திரிய மருத்துவர் (பி. 1856)

1951 – பி. யு. சின்னப்பா, தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர்

1968 – பியட்ரல்சினாவின் பியோ, இத்தாலியப் புனிதர் (பி. 1887)

1969 – சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா, இலங்கை-சிங்கள அரசியல்வாதி (பி. 1884)

1973 – பாப்லோ நெருடா, நோபல் பரிசு பெற்ற சிலி நாட்டுக் கவிஞர் (பி. 1904)

1974 – ஜெயச்சாமராஜா உடையார், மைசூர் சமத்தானத்தின் கடைசி அரசர் (பி. 1919)

1995 – க. துரைரத்தினம், இலங்கை அரசியல்வாதி (பி. 1930)

1996 – மஞ்சு பாசினி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1906)

1996 – சில்க் ஸ்மிதா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1960)

2011 – மன்சூர் அலி கான் பட்டோடி, இந்தியத் துடுப்பாட்ட வீரர் (பி. 1941)

2012 – அஸ்வினி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1969)

2013 – ரூத் பாட்ரிக், அமெரிக்க உயிரியலாளர் (பி. 1907)

2015 – தயானந்த சரசுவதி, இந்திய ஆன்மிக குரு (பி. 1930)

2018 – சார்லசு காவோ, ஆங்காங்-அமெரிக்க-பிரித்தானிய இயற்பியலாளர் (பி. 1933)

 

இன்றைய தின சிறப்புநாள் :

பெரும் இனவழிப்பு நினைவு நாள் (லித்துவேனியா)

தேசிய நாள் (சவூதி அரேபியா)

ஆசிரியர் நாள் (புரூணை)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *