செப்டம்பர் 17: தந்தை பெரியாரின் பிறந்த நாள்..!!

பெரியாரின் 142 வது பிறந்த நாள் விழா வெகு எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தில் எழுச்சியூட்டிய அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்தவாதியாக இன்றும் கொண்டாடப்படுபவர் பெரியார். மூட நம்பிக்கைகளை ஒழித்து, சாதி வேற்றுமைகளை அகற்ற போராளி பகுத்தறிவாளர். அவரது ஆளுமை இன்றளவும் தமிழக அரசியலில் கோலோச்சி நிற்கிறது. ஈரோடு மாவட்டத்தில் சின்னதாய் வெங்கட்ட நாயக்கர் தம்பதிக்கு 1879ஆம் ஆண்டில் பிறந்தவர் ராமசாமி நாயக்கர். சாதி ஒழிப்பில் கால் பதித்தபோது தமது பெயரில் இருந்த நாயக்கர் என்ற பெயரை அகற்றிவிட்டு அனைவருக்கும் பெரியவர் பெரியாராக மாறினார். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த பின்னர் படிக்க விருப்பம் இல்லாமல் தந்தையின் வியாபாரத்தை கவனிக்க ஆரம்பித்தார்.

பகுத்தறிவு சிந்தனைகள் கூடா ஆரியத்தை கேள்விகளால் துளைத்து எடுத்த திராவிடத்தை வளர்த்தார். பத்தொன்பதாவது வயதில் 13 வயது நாகம்மையை திருமணம் செய்துகொண்டார். பகுத்தறிவுக்கு எதிரான தந்தையின் கோபம் கண்டு அதிருப்தியில் காசிக்குப் பயணமானார் பெரியார். அதுதான் அவரின் எதிர்கால புரட்சிக்கு வித்திட்டது என்று கூறலாம். 1919 ஆம் ஆண்டில் தம்மை காங்கிரஸில் இணைத்துக்கொண்டு காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றினார். வணிகர்களுக்கு எதிராக போராட்டம், கல்லு கடைக்கு எதிர்ப்பு என பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றார். திருப்பூர் கூட்டமொன்றில் கல்வியில் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு என்பதை முழங்க காங்கிரஸில் எதிர்ப்பு எழுந்தது.

இதைஅடுத்து அக்கட்சியிலிருந்து 1925 ஆம் ஆண்டு பிரிந்தார். அதே ஆண்டில் பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார். தீண்டாமை, சாதி எதிர்ப்பு, பெண்ணடிமை குழந்தைத் திருமணம் உள்ளிட்டவற்றை எதிர்த்தார். தமது இயக்கத்தை பரப்பும் வகையில் 1925 ஆம் ஆண்டு குடியரசு நாளிதழை தொடர்ந்தார். தமிழகம் தவிர 1929 முதல் 1932 வரை வெளி நாடுகளுக்கு பயணித்து சுயமரியாதையை பரப்பினார். 1937 ஆம் ஆண்டில் இந்தி எதிர்ப்பு போராட்டம் வெடிக்க நீதி கட்சி சார்பான போராட்டத்தில் கைதாகி 1939 ஆம் ஆண்டு விடுதலையானர்.

பின்னர் அதன் தலைவராக பொறுப்பேற்ற பெரியார் 1944 ஆம் ஆண்டு நீதிக்கட்சியை திராவிடர் கழகம் என்று மாற்றினார் கருப்பு சக்கரத்தின் நடுவே ஒரு சிவப்பு வட்டம் என்பதை கழகத்தின் கொடியானது. சமுதாய மறுமலர்ச்சி, கடவுள் மறுப்பு, பெண்ணியம் ஆகிய கொள்கைகளை சார்ந்து இயக்கம் இருந்ததால் திராவிடர் கழகத்தை அரசியல் கட்சியாக விரும்பவில்லை. திராவிட நாடு என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. பின்னாளில் 1948 தம்மைவிட 40 வயது இளையவரான மணியம்மையாரை மறுமணம் செய்துகொள்ள அண்ணாதுரை தலைமையிலான நிர்வாகிகள் திகவில் இருந்து பிரிக்க திமுக என்ற புதிய கட்சி உதயமானது.

1952 ஆம் ஆண்டு முதல் பிள்ளையார் உருவ பொம்மைகளை உடைப்பது, 1956 ஆம் ஆண்டு ராமர் உருவப்படம் எரிப்பு என போராட்டங்கள் நடத்தி பெரியார் கைதானார். 1973 ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி சென்னை தி நகரில் பெரியாரின் கடைசி கூட்டம் நடைபெற்றது. அதில் டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி தனது 94 ஆவது வயதில் காலமானார். அவர் காலம் ஆனாலும் அவரது கொள்கைகள், அதன் தாக்கங்கள் இன்றைய சமகால அரசியலும் தேவையாக இருப்பது தான் மறுக்க, மறக்க முடியாத உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *