‘பாலியல் வழக்குக்கு தனி நீதிமன்றம்” தமிழக முதல்வர் அறிவிப்பு …!!

பாலியல் வழக்குகளை விசாரிக்க தமிழகத்தில் விரைவில் தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் நீதிமன்ற கட்டடம் திறப்பு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில் , தமிழகத்தில்1,149 நீதிமன்றங்கள் உள்ளது.சென்னையில் 126 நீதிமன்றங்களும் பிற மாவட்டங்களில் 1023 நீதிமன்றங்களும் இயங்குகின்றன. இதற்கான கட்டடங்கள் பராமரித்தல், குடியிருப்பு கட்டடம் போன்ற நீதித்துறையின் மேம்பாட்டு பணிக்காக கடந்த 8 ஆண்டுகளில் சுமார் 1000 கோடி ரூபாயை தமிழக அரசு வழங்கியுள்ளது.

Image result for edappadi palanisamy

மேலும் 2011- 12 முதல் 18- 19 வரை 456 புதிய நீதிமன்றங்களை ஏற்படுத்த அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.சென்னையில் சிறப்பு நீதிமன்றம் உட்பட 33 புதிய நீதிமன்றங்களை 2018-19 ஆம் ஆண்டு  அரசு அமைத்துள்ளது என்று தெரிவித்த தமிழக முதல்வர் பாலியல் வழக்குகளை விசாரிக்க தமிழகத்தில் விரைவில் தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் , உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்க மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துகிறோம் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *