தமிழகத்தில் செப். 1 முதல் எவை இயங்கும் ? எவை இயங்காது ?

தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்க தளர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சரின் அறிக்கையில் தமிழகத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில்,

தமிழகம் முழுவதும் அனுமதி:

தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் இன்றி பொதுமக்கள் பயணிக்க அனுமதி.

வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருவதற்கு இ-பாஸ் நடைமுறை தொடரும்.

அனைத்து வழிபாட்டு தலங்களிலும், பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி.

வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் தரிசனத்திற்கு இரவு எட்டு மணி வரை மட்டும் அனுமதி.

மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அனுமதி.

சென்னையில் பெருநகர  பேருந்து போக்குவரத்து சேவையை செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அனுமதி.

சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கு செப்டம்பர் ஏழாம் தேதி முதல் அனுமதி.

வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள்,  பெரிய கடைகள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி.

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி.

உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி.

தேனீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி.

உணவகங்களில் பார்சல் சேவை இரவு 9 மணி வரை அனுமதி.

தொழிற்சாலைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி.

தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுக்கள், கேளிக்கை விடுதிகள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதி.

உடற்பயிற்சிக்கான பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறை வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி திறக்க அனுமதி.

தற்போது 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கும் அரசு அலுவலகங்கள் வரும் ஒன்றாம் தேதி முதல் 100 பணியாளர்களுடன் இயங்கும்.

நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து மலை வாசஸ்தலங்களுக்கும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் செல்ல இ- பாஸ் தேவை

தமிழகம் முழுவதும் தடை :

மாநிலத்திற்குள் பயணிகள் ரயில் செயல்பட வரும் 15-ஆம் தேதி வரை அனுமதி இல்லை.

பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்கள், அனைத்து கல்வி நிறுவனங்கள் திறக்க தடை.

கல்வி நிலையங்கள் இணையவழி கல்வி கற்பிக்க அனுமதி.

தமிழகம் முழுவதும் திரையரங்குகளை திறக்க தடை தொடரும்.

தமிழகம் முழுவதும் நீச்சல் குளங்கள் திறக்க தடை.

கடற்கரை, உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், சுற்றுலா தளங்கள் திறக்க தடை.

மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கு தடை.

புறநகர் புறநகர் மின்சார ரயில் போக்குவரத்துக்கு தடை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *