செப்.8 சர்வதேச கல்வியறிவு நாள் …!!

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8_ஆம் தேதி சர்வதேச கல்வியறிவு நாள் கடைபிடிக்கப்படுகின்றது.

யுனெஸ்கோ என்று பொதுவாக அழைக்கப்படும் ஐ.நா கல்வி அறிவியல் கலாச்சார நிறுவனம்  எழுத்தறிவின்மையை அகற்றும் பொருட்டு 1965 ம் ஆண்டு செப்டம்பர் 8 -ம் நாள் ஈரான் நாட்டின் தலைநகர் டெக்ரானில் உலக நாடுகளின் கல்வி அமைச்சர்களின்மாநாடு ஒன்றை நடத்தியது. இம்மாநாட்டில் எழுத்தறிவின்மையால் உலக நாடுகளில் ஏற்படும் அரசியல் சமூக பொருளாதார பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்கப்பட்டது. எழுத்தறிவின்மையை உலகிலிருந்து அறவே அழிப்பதற்காக ஆற்ற வேண்டிய பணிகள் நடைமுறைகள் ஆகியவைகளை பட்டியலிட்டு ஒரு அறிக்கையையும் அளித்தது. எழுத்தறிவின்மையை போக்குவதற்காக மாநாடு நடைபெற்ற செப்டம்பர் 8 -ம் தேதியை சர்வதேச எழுத்தறிவு நாள் என யுனெஸ்கோவின் 14 வது பொதுக்குழு பிரகடனம் செய்தது. 1967 ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 -ம் நாள் சர்வதேச எழுத்தறிவு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.