“எப்போது பதவியை ராஜினாமா செய்யுறீங்க” அமைச்சரை சாடும் செந்தில் பாலாஜி…!!

எப்போது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய போகிறீர்கள் என்று அமைச்சர்  விஜயபாஸ்கருக்கு செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் திமுகவிற்கே சாதகமாகியது. 38 மக்களவை தொகுதிகளில் போட்டியிட்ட திமுக கூட்டணி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதே போல 22 சட்டமன்ற தொகுதிகளில் 13_யை திமுக தனதாக்கி கொண்டது. இதில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் அதிமுக_வில் இருந்து TTV தினகரனுக்கு ஆதரவு தெரிவித்ததால் நீக்கப்பட்ட செந்தில் பாலாஜி அமமுக_த்தில் இருந்து விலகி திமுக_வில் இணைந்து வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

இதற்கான தேர்தல் பிரச்சாரம் நடைபெற்ற போது பரப்புரை செய்த தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர் , செந்தில் பாலாஜி அரவக்குறிச்சியில் நின்றாலும் சரி கரூர் மக்களவை தொகுதியில் நின்றாலும் சரி அவர் டெபாசிட் வாங்க மாட்டார் அப்படி வாங்கினால் நான் என்னுடைய பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று தேர்தல் பரப்புரையில் பேசியிருந்தார்.

இந்நிலையில் தேர்தல் முடிவில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் செந்தில் பாலாஜி தன்னை எதிர்த்து போட்டியிட அதிமுக வேட்பாளரை விட 37 ஆயிரத்துக்கு அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த செந்தில் பாலாஜி , விஜயபாஸ்கர் எப்போது ராஜினாமா செய்வீர்கள் , நீங்கள் ராஜினாமா செய்தால் கரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் அதில் யாரை வேண்டுமானாலும் நிறுத்துங்கள் திமுக வெற்றி பெறும் என்று  தெரிவித்தார்.