அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி போட்டி…..விருப்பமனுவை அளித்தார்…!!

அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட செந்தில் பாலாஜி விருப்பமனு அளித்துள்ளார் .

இன்னும் சில நாட்களில் மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.அதில் தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் தேதி_யும் சேர்த்த்து வெளியாக வாய்ப்புள்ளது.மேலும் அதிமுக , திமுக ஆகிய கட்சிகள் நாடாளுமன்றம் , 21 சட்ட மன்றம் என இரண்டு தேர்தலுக்கும் பிரசாரம் , தேர்தல் கூட்டணி என கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திராவிட முன்னேற்ற கழகம் சட்ட பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான விருப்பமனு விநியோகித்து வருகின்றது.இதில் அமமுக இருந்து விலகி திமுகவில் இணைந்த நீக்கப்பட்ட அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி அதே அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட மீண்டும் விருப்பமனு அளித்துள்ளார்.

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *