செஞ்சி டூ திருப்பதி… கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர்…. செம குஷியில் பஸ் பயணிகள்…!!!!

செஞ்சி-திருப்பதி நேரடி பேருந்து சேவையை அமைச்சர் மஸ்தான் கொடிகாட்டி தொடங்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் இருந்து திருப்பதிக்கு பேருந்து சேவை வழங்ககோரி அப்பகுதி மக்கள் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் மஸ்தானிடம் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு செஞ்சியில் இருந்து திருப்பதிக்கு புதிய பேருந்து சேவையை தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மஸ்தான் கலந்துகொண்டு புதிய பேருந்து சேவையை கொடிகாட்டி தொடங்கி வைத்தார். அப்போது நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர்கள் வணிகம் துரைசாமி முன்னிலை வகித்தார். இதனையடுத்து செஞ்சியின் பணிமனை மேலாளரான சுரேஷ் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில் தொ.மு.ச. துணை பொது செயலாளர் என்.கே.செல்வராஜ், ஓட்டுநர் செயலாளர் நாராயணசாமி, நடத்துனர் செயலாளர் தியாகராஜன், தொழில்நுட்ப செயலாளர் காதர் நவாஸ், பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.எஸ் பழனி, கோதண்டராமன், கிருஷ்ணகுமார் மற்றும் தொ.மு.ச. நிர்வாகிகள், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ரிஸ்வான், தொண்டரணி பாஷா, தகவல் தொழில் நுட்ப அணி கோபால் போன்றோர் கலந்து கொண்டனர். இதுவரையிலும் 108 திவ்ய தேசங்களில் பிரதானமான திருப்பதிக்கு விழுப்புரத்தில் இருந்து நேரடி பேருந்து போக்குவரத்து வசதி இருந்து வருகிறது. இந்நிலையில் செஞ்சியில் இருந்து திருப்பதி நேரடி பேருந்து சேவை வேண்டும் என்ற தங்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு இருப்பதால் அமைச்சர் மஸ்தானுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *