செம…. ”சர்தார்” பட டீசர் செய்த சாதனை…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!

‘சர்தார்’ படத்தின் டீசர் யூடியூபில் சாதனை படைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர்  இயக்குனர் பி. எஸ். மித்ரன் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ”சர்தார்”. இதில் வில்லனாக ஹிந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்திருக்கிறார்.

தீபாவளிக்கு வெளியாகிறது கார்த்தியின் 'சர்தார்' | karthi starring Sardar  movie release date announced - hindutamil.in

மேலும், இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், லைலா, ராசி கண்ணா, முனிஷ்காந்த் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை பிரின்ஸ் பிச்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் வரும் தீபாவளியன்று திரையரங்கில் ரிலீசாக உள்ளது.

இந்த படத்தின் டீசரை சூர்யா தனது சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்டார். இந்நிலையில், ”சர்தார்” படத்தின் டீசர் யூடியூபில் 7.6 மில்லியன் பார்வையாளர்களை கடந்து முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.